வாண்டு தேவதை 1

Vignesh Marimuthu | April 04, 2023

கலரிங் புத்தகத்தை தரையில் கிடத்தி கிட்டதட்ட அதன் மேல் படுத்து கண்கள் மிளிர நாக்கை துறுத்தியபடி காலாட்டி கொண்டே வண்ணம் தீட்டியது ஒரு வாண்டு.

கருப்பு நிற இலைகளும் பச்சை நிற பூக்களும் பூக்க துவங்கின. வானம் பழுப்பு நிரமாய் ஒளிர்ந்து கொண்ட வேளையில் நிப் உடைந்தால் மீதி வானம் மஞ்சள் ஆனது. நீல நிற கலர் பென்சில் காணாமல் போன அதிர்ஷ்டம், கடல் ஊதா நிறம் ஆகி போனது அலை அலையாய்.

ஊதா நிற அலை என் கால் வருடிய போது, வண்ண வண்ணமாய் கரைந்து போனேன் கடலோடு.

~வீராகுறிலில்~

Share on