தனிமை பேய்

Vignesh Marimuthu | January 19, 2023

மெல்ல மெல்ல நித்திரை பெருங்கடலில் நீந்தி கொண்டிருந்த நான் யாரோ பாரமாக என் நெஞ்சில் கைவைத்து அழுத்துவது போல் இருந்தது.

எழுந்து பார்த்தேன். தனிமையின் கைகள். கொஞ்ச நாளாகவே என் கூடே இருக்கிறது. நான் பார்த்ததும் என்னை பார்த்து சிரித்தது. பற்கள் இல்லாத, முகம் இல்லாத அந்த தனிமையின் சிரிப்பை நான் அறிவேன்.

நேற்று பார்த்த போது என் இடுப்பு வரை ஏறி இருந்தது. அதற்கு முன் ஏதோ ஒரு நாள் பார்த்த போது என் கால் இரண்டையும் பற்றி இருந்தது.

கழுத்து வரை ஏறி என்னை ஆட்கொள்ளும் முன் வந்துவிடுவாளா அவள்?

Share on