Situationship

Vignesh Marimuthu | April 10, 2023

சல்லென வந்து நின்ற பேருந்தின் ஜன்னல் இருக்கையில் காதின் பின் தலை முடி சொருகியபடி என் காதலி. கண்கள் மோதி காதல் விபத்து ஏற்படும் வேளையில், விசில் அடித்து புயல் போல் கிளம்பியது பேருந்து. கலைந்த என் முடியை சரி செய்த படி என் அடுத்த காதலியை எதிர் நோக்கி நின்றேன்.

Share on