Heal

Vignesh Marimuthu | April 05, 2023

தலைவனுக்கு பிடித்த பசலை நோயை சரி செய்தாக வேண்டும்.

நம்பர் block செய்தாயிற்று. புகைப்படங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்கு அனுப்பி, பின் அங்கிருந்து எடுத்து திரும்ப கிடைக்காத படி அழித்தாயிற்று. பாட்டு கேசட்டுகள் எல்லாம் அம்மியில் வைத்து நொருக்கபட்டு விட்டன. உண்டு கழித்த உணவகம் எல்லாம் நெருப்பு வைத்து விட்டாயிற்று. கண்டு ரசித்த நிலவை ஏவுகணை வைத்து தகர்தாயிற்று.

எல்லாம் முடித்து ஆசுவாசமாய் இருக்கையில் எங்கோ பெய்த மழையில் என்னிடம் வந்த வாடை காற்று என் தலை முடி கோதியது, அவள் விரல் போலே.

~வீராகுறிலில்~

Share on