நடைமேடை ஒன்றில்

Vignesh Marimuthu | April 15, 2023

நான் தான் குடுப்பேன் என்று அடம்பிடித்து வாங்கி வைத்த பத்து ரூபாய் நோட்டுடன், ஜன்னல் கம்பியில் கன்னம் அழுத்த பதித்து கண்கள் விரிய எட்டி பார்த்து கொண்டு இருந்தது ஒரு வாண்டு தேவதை.

'ஆம வடே ஆம வடே' என்று கூவிகொண்டு வந்த அண்ணனை கை காட்டி நிப்பாட்டி 'ஒண்ணு வட' என்று சொல்லி ரூபாயை நீட்டியது.

அந்த வாண்டு தேவதையின் உள்ளங்கையில் சிக்கி கசங்கி போன பத்து ரூபாய்க்கு, வடையோடு சேர்த்து இப்பேரண்டதையும் மடித்து குடுக்கும்படி ஒரு பேப்பர் செய்ய வேண்டும்.

~வீராகுறிலில்~

Share on