மாபெரும் தனி கனவு

Vignesh Marimuthu | March 30, 2023

வான் கோவும், பீத்தோவனும் ஆளுக்கொரு earpod மாட்டிகொண்டு சலோமியா பாட்டு கேட்பது போல் ஒரு கனா கண்டேன்.

கார்ல் மார்க்ஸ் வீட்டில் IT ரெய்டு நடப்பது போலவும், பெரியார் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பது போலவும் அடிக்கடி கனா வரும் எனக்கு.

இளையராஜா பாட்டுக்கு, பாபா சாகேப் பின்னணி வயலின் வாசிப்பது போல் நேற்று பகல் கனவொன்று வந்தது.

கர்த்தரும், புத்தரும் anger management கிளாஸில் சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் ஒரு கனவு வந்ததாய் ஞாபகம்.

இவை அனைத்தும் பலிக்காது போனாலும் பரவாயில்லை.

தூக்கம் இல்லாத, ஆரவாரம் இல்லாத ஒரு நடுநிசியில், கண்விழித்தபடி ஓர் கனா கண்டேன். எல்லைகள் அற்ற, மதங்கள் இல்லா ஓர் உலகில், மிஞ்சி இருக்கும் அனைத்து தோட்டாக்களும், ஒரே நொடியில் பூக்களாய் மாறி விடுவதாய் ஒரு மாபெரும் கனவு.

அது மட்டும் பலித்தே ஆக வேண்டும்.

~வீராகுறிலில்~

Share on