கவிதை தொகுப்பு

Vignesh Marimuthu | October 2, 2022

தான் ரசித்து ரசித்து பித்தேறி படித்து பத்திரமாய் சேர்த்து வைத்த கவிதை தொகுப்பினை அள்ளி வந்து என்னிடம் குடுத்து படிக்க சொன்னாள்.

நான் ரசித்து சலிக்காத கவிதையை அவளிடம் காட்ட ஒரு கண்ணாடி வாங்கி குடுத்தால் போதும்


கவிதை புத்தகங்கள் அடுக்கி வைத்து அலங்கரிக்க அலமாரி வாங்கி வந்தேன்.

கூடவே ஒரு வீடும் வாங்கி வந்தேன். உன்னை வைத்து அலங்கரிக்க!!


என் சரி பாதியை திருடி சென்றது அவள் தான் என்று தெரிந்தும்,

மற்ற இடமெல்லாம் தேடி திரிகிறேன் என்னை.

Share on