கவிதை கடத்தல்

Vignesh Marimuthu | April 11, 2023

கூட்ட நெரிச பேருந்து ஒன்றில் படியில் தொங்கியபடி ஒரு பயணம்.

யார் யாரோ யார் யார் கால்களையோ மிதித்து விளையாடி கொண்டு இருந்தனர்.

இரண்டு சீட் தள்ளி ஜிமிக்கி போட்ட காதுடன் ஒரு சுடிதார் அமர்ந்து இருந்தது.

ஒரு பக்க காதும், காதின் பின் சுருண்ட ரோமங்களும், சுடிதார் ஷால் மட்டுமே எனக்கு தரிசனம் கிடைத்தது. ஆனால் நான் பார்த்த வரை அவளே பேரழகி.

கண்டிப்பாக அவள் மேல் ஆயிரம் ஆண்கள் காதல் வயப்பட்டு இருப்பார்கள். கண்டிப்பாக பேருந்தின் முன் கதவு வழியே ஏறியவர்கள் புண்ணியம் செய்து இருப்பார்கள். கண்டிப்பாக அவள் கை புடித்து உடன் திரியும் தோழிகள், அவள் ஜிமிக்கியை ரசித்து இருப்பார்கள். கண்டிப்பாக கவிஞர்கள் கவிதை பாடி இருப்பார்கள்.

நானும் கவிதை எழுதலாம் என நினைத்த போது, ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்கி முகம் காட்டாமல் வேகமாக நடந்து போனால் அவள். கூடவே என் கவிதயையும் கை பிடித்து கூட்டி கொண்டு.

Share on